418822354
SBS Tamil - SBS தமிழ்

Advertise on podcast: SBS Tamil - SBS தமிழ்

Rating
★★★★☆
4.3
from
8 reviews
This podcast has
2029 episodes
Language
Tamil
Publisher
SBS
Explicit
No
Date created
2011/02/07
Latest episode
2026/10/14
Average duration
9 min.
Release period
1 days

Description

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Unlock SBS Tamil - SBS தமிழ் podcast Email contact info,
Listeners & Audience details

Email contact information

Direct podcast contact details

Listeners

Audience numbers & engagement insights

Audience details

Podcast Insights

Social media

Check SBS Tamil - SBS தமிழ் social media presence


Podcast episodes

Check latest episodes from SBS Tamil - SBS தமிழ் podcast


தற்காப்புக்காக pepper spray பயன்படுத்த நிரந்தர அனுமதி வழங்கும் ஆஸ்திரேலியப் பிராந்தியம்!
2026/10/14
Northern Territoryஇல் தற்காப்புக்காக Pepper Spray பயன்படுத்துவதற்கான அனுமதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவோருக்கு என்னென்ன தெரிவுகள் உள்ளன?
2026/10/14
இளம் வயதிலேயே கருமுட்டைகளை அல்லது விந்தணுக்களை உறைநிலையில் சேமித்து வைப்பது எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குமா, யாரெல்லாம் இதனைப் பரிசீலிக்கலாம், இதன் நன்மைகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மருத்துவ வாய்ப்புகள் குறித்து பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் தொடரும் சவால்கள் என்ன?
2026/10/14
ஆஸ்திரேலியாவில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் சுகன்யா, நதியா சந்திரசேகரன், சங்கர் ஜெயபாண்டியன் ஆகியோர் இத்தகைய சவால்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலி ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். Living in Australia for years: What challenges remain?
வீட்டுக்கான காப்புறுதி (Insurance) கட்டணம் உயர்கிறது! ஏன்?
2026/10/14
சூழல் வெப்பமடைந்து வருவதாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாலும், காட்டுத்தீ அச்சுறுத்தல்களின் அடிப்படையில் இந்தக் கோடைக்காலம் எப்படி இருக்குமோ என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஏற்படக்கூடிய அபாயத்திற்காகத் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் மக்கள் தயார்படுத்தி வருகின்றனர். சிலர் காட்டுத்தீயைத் தடுக்கும் பொருட்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான டொலர்களைச் செலவிடுகின்றனர். சில சமயங்களில், நில உரிமையாளர்கள் தங்கள் சமூகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். மேலும், தாங்கள் செய்துள்ள பணிகள் காப்பீட்டு பிரீமியங்களில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். Kerrin Thomas மற்றும் Charis Chang எழுதிய சிறப்பு விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 14 ஒக்டோபர் 2026, புதன்கிழமை
2026/10/14
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
சுமார் 43 வருடங்களாக நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்
2026/10/13
இலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற ஜூலை கலவரத்திற்கு அரசிடம் நீதிவிசாரணையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Tamil people still waiting for justice after nearly 43 years
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற இயற்கை அதிசயத்தை காண இனி முன்பதிவு அவசியம்
2026/10/13
விக்டோரியா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான Twelve Apostles பாறைகளைக் காண இனி முன்பதிவு அவசியம்; நுழைவுக் கட்டணமும் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களில் புதிய மாற்றம்
2026/10/13
நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 13 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை
2026/10/13
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
How laws are made, and how they affect you | How Australia Works - சட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, உங்களை எவ்வாறு பாதிக்கின்றன|
2026/10/12
How are laws made in Australia? Through Wurundjeri Elder Uncle Dave Wandin’s story of the Birrarung, also known as the Yarra River, learn how an idea becomes a bill, passes through Victoria’s parliament and receives royal assent, the formal approval that makes it law. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? யர்ரா நதி என்றும் அழைக்கப்படும் பரரங் பற்றிய வுருண்ட்ஜெரி மூத்தவரான David Wandin, அவரை Uncle Dave என்று பலரும் அழைப்பார்கள். Uncle Daveஇன் கதையின் மூலம், ஒரு யோசனை எவ்வாறு சட்ட முன்வரைவாக மாறுகிறது, விக்டோரிய மாநில நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதைச் சட்டமாக்கும் முறையான ஒப்புதலான அரச ஒப்புதலைப் பெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast) ஆகும். இது உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம், ஆஸ்திரேலியாவில் அரசு எவ்வாறு செயல்படுகிறது, சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மாற்றப்படுகின்றன, மற்றும் இதில் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தொடரைக் கேளுங்கள்; அத்துடன் 'How Australia Works' முதன்மைப் பக்கத்தில் 60 மொழிகளில் இதன் சுருக்கமான வடிவங்களையும் காணலாம்.
Money Laundering என்றால் என்ன? மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி?
2026/10/12
Money Laundering என்றால் என்ன? சாதாரண பொதுமக்களும் சர்வதேச மாணவர்களும் இது குறித்து ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்? மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்? மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Money Laundering தடுப்பு தொடர்பாக சான்றிதழ் பெற்ற நிபுணரும் ஆலோசகருமான Karthick Elangovan அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். பிரிஸ்பேன் 4EB ஒலிப்பதிவு கூடத்தில் இந்த நேர்முகம் பதிவு செய்யப்பட்டது. What is money laundering, and how can you protect yourself from scams?
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
2026/10/12
இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி; ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திப்பு; இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 12 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை
2026/10/12
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
ஏன் புதுடெல்லியில் மாணவர் போராட்டம் மீண்டும் வலுக்கிறது? பின்னணி என்ன?
2026/10/11
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026)
2026/10/09
ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)

Podcast reviews

Read SBS Tamil - SBS தமிழ் podcast reviews


4.3 out of 5
8 reviews
★★★★★
balsonline 2011/12/26
Informative
Useful and informative
check all reviews on apple podcasts

Podcast sponsorship advertising

Start advertising on SBS Tamil - SBS தமிழ் relevant audience podcasts


What do you want to promote?